கோவக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கோவக்காயில் இரும்பு சத்து, பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது. எனவே வாரத்திற்கு மூன்று முறை கோவக்காய் சாப்பிடுவதால் இதயத்தை பாதுகாக்கலாம். அதே சமயம் கோவக்காய் கல்லீரலில் உள்ள கிருமிகளையும் நச்சுக்களையும் வெளியேற்றி கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்த உதவுகிறது.
இவை இதயத்தின் சீரான இயக்கத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் எலும்பு வளர்ச்சிக்கும் உதவி புரிகிறது. மேலும் கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும் வெளியேற்ற பயன்படுகிறது.

புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு கோவக்காய் களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
இதயத்தை பாதுகாக்க பொட்டாசியம் சத்து தேவையானதாக இருக்கிறது. எனவே கோவைக்காயில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
கோவக்காய் உணவில் சேர்த்துக் கொள்வதனால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
நீரழிவு நோய் உள்ளவர்கள் கோவைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது சிறுநீரில் அதிக அளவு சர்க்கரை சத்துக்கள் வெளியேறுவதை தடுக்கும்.
செரிமான பிரச்சினைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் கோவக்காய் சிறந்த தீர்வாகும்.
இந்த கோவக்காயை பொரியலாகவோ அல்லது குழம்பாகவோ சாப்பிடுவதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
மேலும் இது சிறுநீரக உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. எனவே ஆரோக்கியமாக வாழ கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
இருப்பினும் கோவக்கயினால் ஒவ்வாமை எதுவும் ஏற்பட்டால் தவிர்ப்பது நல்லது. அதே சமயம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வதும் அவசியம்.


