Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பனங்கற்கண்டின் இன்றியமையாத மருத்துவ குணங்கள் பற்றிய அறிவோம்!

பனங்கற்கண்டின் இன்றியமையாத மருத்துவ குணங்கள் பற்றிய அறிவோம்!

-

பனங்கற்கண்டின் இன்றியமையாத மருத்துவ குணங்கள் பற்றிய அறிவோம்!பெரும்பாலான ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. கருப்பட்டியிலிருந்து சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் பனங்கற்கண்டு அதிகமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பனங்கற்கண்டில் கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், வைட்டமின் பி1,பி2, பி3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து குடித்து வந்தால் மார்பு சளி குணமடையும். மேலும் தொண்டைப்புண், வலி போன்றவைகளும் சரியாகும்.

பனங்கற்கண்டு உடல் சூடு, காங்கை, நீர் சுருக்கு ஆகியவற்றிற்கு சிறந்தது.

பனங்கற்கண்டு, குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தர உதவுகிறது.

மேலும் இது கருவுற்ற பெண்களுக்கு உண்டாகும் மலச்சிக்கல் வயிற்றுப்புண் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. அதேசமயம் ரத்த அழுத்தத்தை சீராக்கவும், டைபாய்டு, நீர்க்கட்டு போன்ற வியாதிகளை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.

பாலில் பனங்கற்கண்டு கலந்து பருகி வருவதனால் இருதயம் வலுவாகும். இதில் உள்ள கால்சியம் சத்துக்கள் பற்களை உறுதிப்படுத்தி ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்கும். மேலும் இது கண் நோய், ஜலதோஷம், காச நோய் போன்றவைகளுக்கு தீர்வாகவும் பயன்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இதில் உள்ள இரும்புச்சத்து பித்தத்தை குறைக்க உதவுகிறது.

இருந்த போதிலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு இதனை பயன்படுத்துவது நல்லது.

MUST READ