துத்தி இலைகளின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். அதாவது இது வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள புண்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.
1. துத்தி இலைகள் பல மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது. இது மூல நோய்க்கு மிகவும் பயன்படுகிறது. அதாவது துத்தி இலைகளை நன்கு கழுவி ஒரு லிட்டர் தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கொஞ்சம் ஆறவிட வேண்டும். தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது அதில் 10 முதல் 15 நிமிடங்கள் அமர்ந்து கொள்ளவேண்டும். இதை தினமும் ஒரு முறை செய்தால் மூலப்பகுதியில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், வலி போன்றவை குறையும்.
2. மேலும் இதை கீரையைப் போல் வதக்கி சாப்பிட்டாலும் மூல நோய் தீரும்.
3. அடுத்தது இந்த இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பொறுக்கும் சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கட்டினாலும் மூல நோய்க்கு தீர்வு கிடைக்கும்.
4. துத்தி இலைகளை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
5. மேலும் இது காசநோய், விந்து விருத்திக்கும் பயன் தருகிறது.
6. இதை தவிர ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
8. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
9. உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கும்.
10. கண்பார்வைக்கும் இது நல்லது.
எனவே நான்கு முதல் ஐந்து துத்தி இலைகளை நன்றாக கழுவி ஒரு கப் அளவு தண்ணீரில் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு தினமும் டீ போல குடித்து வரலாம். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


