ரம்பை இலையும் அதன் பயன்களும்
ரம்பை இலையை பல இடங்களில் பிரியாணி இலை என்று அழைப்பர். ஏனென்றால் இது சமையலில் பிரியாணி போன்ற உணவுகளுக்கு வாசனை சேர்க்க பயன்படுகிறது. அதே சமயம் இது வைட்டமின் சி, நியாஸின், ரிப்போப்ளேவின் போன்ற சத்துக்களையும் ஆக்சிஜனேற்றங்களையும் கொண்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின்களும் ஆன்டி-ஆக்சிடென்ட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, இதன் சாறு மூட்டு வலியை குறைக்க உதவுகிறது. அடுத்தது இந்த இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் பயன்படுகிறது. இது தவிர அஜீரணம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இந்த ரம்பை இலை பயன்படுகிறது.

மேலும் இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. அதுமட்டுமில்லாமல் இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் ஆகியவைகளின் அபாயத்தை குறைப்பதிலும் பங்கு வகிக்கிறது.
அடுத்தது மாதவிடாய் நேரத்தில் உண்டாகும் வயிற்று வலியை சரி செய்ய இது உதவும். உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. இந்த இலைகளை எடுத்துக் கொள்வதால் உடல் சோர்வு குறையும். எனவே ரம்பை இலை மட்டுமல்லாமல் இதன் சாற்றையும் குடித்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு:
ரம்பை இலைகளை பிரியாணி போன்றவைகளில் சேர்த்து பயன்படுத்தலாம். மேலும் இதை துவையலாகவும், பொடியாகவும் சாப்பிடலாம். இது தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


