Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்குறையில்லாமல் சமைக்க சில சமையல் டிப்ஸ்!

குறையில்லாமல் சமைக்க சில சமையல் டிப்ஸ்!

-

- Advertisement -

குறையில்லாமல் சமைக்க சில சமையல் டிப்ஸ்!குறையில்லாமல் சமைக்க சில சமையல் டிப்ஸ்!

1. குழம்பில் உப்பு அதிகமானால் பொட்டுக்கடலை மாவு அல்லது சோள மாவு பாலில் கலந்து குழம்பில் சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் உப்பின் அளவை சரி செய்யலாம்.

2. கூட்டு, பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால் தேங்காயை துருவி சேர்த்தால் உப்பு அளவு குறைந்து விடும்.

3. மசாலா போன்ற பொடி வகைகளில் உப்பு அதிகமானால் அதில் உள்ள பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை கடாயில் வறுத்து பொடி செய்து கலந்து விட வேண்டும்.

4. பிரியாணி காரமாக இருந்தால் பெரிய வெங்காயம் ஒன்றினை எடுத்து பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து பிரியாணியில் கலந்து விட காரம் குறையும்.குறையில்லாமல் சமைக்க சில சமையல் டிப்ஸ்!

5. குருமா, கிரேவி போன்றவைகளில் தண்ணீர் அதிகமானால் பொட்டுக்கடலை மாவு அல்லது சோள மாவு சேர்த்து கலந்து கொதிக்க வைத்தால் கெட்டியாக மாறிவிடும்.

6. ரசத்தில் உப்பு அதிகமாகி விட்டால் ஒரு டம்ளர் அளவில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு அத்துடன் மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் போட்டு சிறிதளவு எலுமிச்சம் பழம் சாறைப் பிழிந்து இறக்கினால் உப்பின் அளவு சரியாகும்.

7. பாவ் பஜ்ஜி, பன்னீர் பட்டர் போன்றவைகளில் உப்பு அல்லது காரம் அதிகமானால் பிரஸ் கிரீம் அல்லது வெண்ணெய் சேர்த்தால் உப்பு, காரம் குறைந்து சுவையாக இருக்கும்.

MUST READ