முகத்தை பளபளப்பாக மாற்றும் சில குறிப்புகள்!
கோடை காலம் தொடங்கி விட்டதால் வெளியில் செல்வது மிகவும் கஷ்டமான விஷயம். ஏனென்றால் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சூரியனிலிருந்து வெளிப்படும் UV கதிர்கள் நம் சருமத்தை கருணை அடைய செய்யும். எரிச்சலை உண்டாக்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடை காலத்தில் பாதுகாப்பாக இருப்பது அவசியம். அதே சமயம் வெயிலுக்கே சவால் விடுவதை போல் சில மாயாஜால குறிப்புகளையும் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இது முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
1. அந்த வகையில் முதலில் இரண்டு ஸ்பூன் அளவு முல்தானி மிட்டி பவுடரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது அதை அப்படியே முகத்தில் தேய்த்து 5 நிமிடங்கள் காயவைத்து வாழைப்பழ தோலினால் அதை அப்படியே துடைத்து எடுக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் வித்தியாசத்தை நீங்களே காணலாம்.
2. அடுத்தது மஞ்சள் மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவி வர நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
3. இரண்டு ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் சாதம் வடித்த தண்ணீரை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் அது ஜெல் போல் கிடைக்கும். இதையும் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கலந்து முகத்தில் தேய்த்து வர முகத்தின் கருமை நீங்கி பளபளப்பாக மாறும். கற்றாழை ஜெல் இயற்கையிலேயே குளிர்ச்சி பண்பை உடையது. எனவே இது கோடை காலத்தில் முகம் மென்மையாக மாறுவதற்கும் உதவுகிறது.
4. ஒரு சிறிய பப்பாளி துண்டினை எடுத்து அதில் சிறிது பால் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். இப்போது இந்த கலவையை முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது வெயிலினால் கருமை அடைந்த சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவும்.
5. கஸ்தூரி மஞ்சள், சந்தனப்பொடி, கால் ஆகியவற்றை கலந்து முகத்தில் தேய்த்து வரலாம்.
6. இது தவிர கோடை காலத்தில் நீர் அதிகமாக குடிக்க வேண்டும். முகத்தில் தூசி படியாமல் பாதுகாக்க அடிக்கடி முகத்தை கழுவுவது மிகவும் சிறந்தது. இருப்பினும் கோடைகாலத்தில் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.