spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடல் எடையை குறைக்க உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு.... எப்போது? எப்படி உண்ண வேண்டும்?

உடல் எடையை குறைக்க உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு…. எப்போது? எப்படி உண்ண வேண்டும்?

-

- Advertisement -

சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்பது உடல் எடையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. அதாவது உடல் எடையை குறைக்க நாம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் உணவு பழக்க வழக்கங்களை சரியாகப் பின்பற்றினால் மட்டுமே உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். உடல் எடையை குறைக்க உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு.... எப்போது? எப்படி உண்ண வேண்டும்?எனவே கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து புரோட்டின், நார்ச்சத்து உடைய உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதேசமயம் வைட்டமின் சி, வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இருப்பினும் குளிர் காலத்தில் நம் உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைகின்ற காரணத்தினால் நம் உடல் எடை அதிகரிக்கக்கூடும். ஆகையினால் குளிர்காலத்தில் நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அதன்படி உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் குளிர் காலத்தில் உண்டாகும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். அத்துடன் நம் சருமத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. மேலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கினை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். குறிப்பாக நீரிழிவு நோய் உடையவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருக்க இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. எனவே நீரிழிவு நோய் உடையவர்களாக இருந்தாலும் சரி உயர் ரத்த அழுத்த பிரச்சனை உடையவர்களாக இருந்தாலும் சரி தாராளமாக இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கினை எடுத்துக் கொள்ளலாம்.உடல் எடையை குறைக்க உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு.... எப்போது? எப்படி உண்ண வேண்டும்?

அடுத்தது சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஏ போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. இதனை சாப்பிடுவதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை கொடுக்கும். அதன்படி பசியை குறைத்து உடலில் படியும் கெட்ட கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. குறிப்பாக காலை உணவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கினை சேர்த்துக் கொண்டால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருப்பதோடு உணவின் மீதான நாட்டம் குறைந்து எடை இழப்பு எளிதாக்கப்படும்.

we-r-hiring

எனவே சர்க்கரை வள்ளிக்கிழங்கினை வெவ்வேறு வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அப்படியே வேகவைத்து சாப்பிடலாம். இல்லையென்றால் சப்பாத்தி மாவில் பிசைந்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம். சக்கரை வள்ளிக்கிழங்கை அடுப்பில் சுட்டு சாப்பிடலாம். இவ்வாறு சர்க்கரைவள்ளிக்கிழங்கை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு விரைவில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இருப்பினும் இது தொடர்பான ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ