முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற தேவையான தகுதிகள்
இந்த திட்டத்தில் சேர ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000 க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

₹1,20,000 – ஆண்டுக்கு (அரசாணை(நிலை) எண்.560 மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை (அஉதி1-1) நாள்:16.12.2021)
1. கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்றிதழ் பெறவேண்டும்.
2. குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையை சேகரிக்க வேண்டும்.
3. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு செல்ல வேண்டும்.
4. உங்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. தகுதியுடைய நபரின் சட்டபூர்வமான மனைவி/ கணவர்
2. தகுதியுடைய நபரின் குழந்தைகள்
3. தகுதியுடைய நபரைச் சார்ந்த பெற்றோர்கள்
முக்கிய குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருப்பது முக்கியம்.
மக்களே இதை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


