பொதுவாகவே வெளிநாட்டில் வளரும் குழந்தைகளை வளரும் குழந்தைகள் குறைவான உடல் எடை கொண்டவர்களாகவே இருப்பர். அதுதான் ஆரோக்கியமானது என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் கொழு கொழுவென இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆரம்பத்தில் அந்த குழந்தைகள் கொழு கொழுவென இருந்தாலும் வளர வளர அவர்களின் உடல் எடை கட்டுக்குள் வந்து விடும். அப்படி இருந்தால் தான் எதிர்காலத்தில் அவர்களுக்கு உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் ஒரு சில குழந்தைகள் சரியான முறையில் உணவுகளை எடுத்துக் கொள்ளாததால் அவர்களின் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பது பெற்றோர்களுக்கு மன வருத்தத்தை தருகிறது. இந்நிலையில் உங்கள் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க பொட்டுக்கடலை கஞ்சி செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் பொட்டுக்கடலையில் மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதச்சத்து போன்ற நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் போதுமான அளவு இருப்பதால் இந்த பொட்டுக்கடலையை எடுத்துக் கொள்ளும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. ஆகையினால் பொட்டுக்கடலையை அப்படியே ஸ்னாக்ஸ் ஆகவும் கொடுக்கலாம் அல்லது தேங்காயுடன் சேர்த்து சட்னி செய்து கொடுக்கலாம். மேலும் உங்கள் குழந்தைகள் ஒரு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள் என்றால் பொட்டுக்கடலையை பொடி செய்து வைத்து அதனை அவலுடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம். அதாவது 2 ஸ்பூன் அளவு அவல் எடுத்துக்கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை பவுடர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை வேக வைத்து நன்கு மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அப்படி இல்லையென்றால் பொட்டுக்கடலை மற்றும் பச்சரிசி ஆகியவற்றை சமமான அளவில் எடுத்து பொடி செய்து அதனை கஞ்சி போல் செய்து கொடுக்கலாம். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.