இன்றுள்ள காலகட்டத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைவரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் பெரும்பாலானவர்கள் நீரழிவு நோயால் அவதிப்படுகின்றனர்.
நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதனால் உண்டாகிறது. அதாவது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலின் என்ற ஹார்மோனின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே இன்சுலின் ஹார்மோன் போதுமான அளவு சுரக்கப்படவில்லை என்றாலும் உடன் செல்கள் இன்சுலினை எதிர்த்து அதன் விளைவாக ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து விடுகிறது. எனவே இன்சுலின் சுரப்பு அதிகரித்தால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தலாம். தற்போது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

1. சிறிதளவு வெந்தயத்தை இடித்து அதில் மஞ்சள், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நீரில் கலந்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த வெந்தய தேநீரை வடிகட்டி தேன் சேர்த்து வாரத்திற்கு மூன்று நாட்கள் குடிக்க வேண்டும். இந்த தேநீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
2.இதேபோல் இலவங்கப்பட்டையையும் பிடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராக குடித்து வருவதும் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க உதவும்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.