எக் பிங்கர்ஸ் செய்வது எப்படி?
எக் பிங்கர்ஸ் செய்ய தேவையான பொருட்கள்!

முட்டை – 5
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
மைதா – 1/2 கப்
பால் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பிரட் கிரம்ஸ் – தேவையான அளவு
செய்முறை:
எக் பிங்கர்ஸ் செய்ய முதலில் முட்டை, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு தட்டில் என்னை தடவி அதில் முட்டை கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும்.
பத்து நிமிடங்களுக்கு பிறகு முட்டை நன்கு வெந்த பிறகு அதனை நீளமாக வெட்டி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கிண்ணத்தில் முட்டை, பால், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதேசமயம் ஒரு தட்டில் மைதா, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது பிரட் கிரம்சை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட வேண்டும்.
இந்த சமயத்தில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.
அதன் பின்னர் நீளமாக வெட்டி வைத்துள்ள முட்டையை முட்டை கலவையில் தோய்த்து அதை மைதா மாவு கலவையின் பிரட்டி பின்னர் மீண்டும் முட்டை கலவையில் தோய்த்து பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து அதை அப்படியே சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது அருமையான எக் பிங்கர்ஸ் தயார். இதனை தக்காளி சாஸுடன் பரிமாற வேண்டும். இதை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்.


