spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பச்சை வாழைப்பழத்தின் முக்கிய நன்மைகள் என்னென்ன?

பச்சை வாழைப்பழத்தின் முக்கிய நன்மைகள் என்னென்ன?

-

- Advertisement -

பச்சை வாழைப்பழத்தின் முக்கிய நன்மைகள்.பச்சை வாழைப்பழத்தின் முக்கிய நன்மைகள் என்னென்ன?

பச்சை வாழைப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, தாமரம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த பச்சை வாழை என்பது நம் பாரம்பரிய உணவில் முக்கிய இடம் பெற்றிருக்கும். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இதில் இயற்கையாகவே குளிர்ச்சியை தரும் பண்புகள் இருக்கிறது. மேலும் இதில் அதிகப்படியான எதிர்ப்பு திறன் கொண்ட மாவுச்சத்து இருப்பதால், இது குடல் இயக்கத்தை சீர்படுத்தி மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

we-r-hiring

பழுத்த வாழைப்பழங்களை விட இனிப்பு குறைவாகவும் சர்க்கரை குறைவாகவும் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கிறது.பச்சை வாழைப்பழத்தின் முக்கிய நன்மைகள் என்னென்ன?

மேலும் இது இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும். அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கும் இது தீர்வு தரும். உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் எலும்பு மற்றும் தசை வலிமைக்கு நன்மை தரும். இதில் உள்ள வைட்டமின் பி6 நரம்பு மண்டலத்திற்கு நன்மை அளிப்பதோடு, இது செரோட்டோனின் உற்பத்தியை ஊக்குவித்து மன அழுத்தத்தை குறைக்கிறது.பச்சை வாழைப்பழத்தின் முக்கிய நன்மைகள் என்னென்ன?

இருப்பினும் பச்சை வாழைப்பழத்தை மிக அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் புடைப்பு ஏற்படும் வாய்ப்புண்டு. அதுமட்டுமில்லாமல் வாந்தி, தலை சுற்றல், இதயத்துடிப்பு அதிகரிப்பது, உடல் எடை அதிகரிப்பது போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். இது தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ