Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மரணத்தை ஏற்படுத்தும் குறட்டை .... தடுக்கும் வழிகள் என்னென்ன?

மரணத்தை ஏற்படுத்தும் குறட்டை …. தடுக்கும் வழிகள் என்னென்ன?

-

- Advertisement -

பெரும்பாலும் குறட்டை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுவதில்லை. ஆனால் அது சில சமயங்களில் மரணத்தையும் வழிவகுக்கக்கூடிய ஆபத்தான அறிகுறி என சொல்லப்படுகிறது. மரணத்தை ஏற்படுத்தும் குறட்டை .... தடுக்கும் வழிகள் என்னென்ன?அதாவது மூக்கு, தொண்டை வழியாக காற்று செல்லும்போது ஏற்படும் சத்தம், அதிகபட்சமாக தூக்கத்தின் தரத்தை மட்டுமே பாதிக்கும் மரணத்தை ஏற்படுத்தாது. இது சாதாரண குறட்டை தான். அதே சமயம் குறட்டை வரும்போது சில வினாடிகள் சுவாசம் தடைபடுவதும், குறட்டையினால் சரியாக தூக்கம் வராததும், மறுநாள் சோர்வை ஏற்படுத்துவதும் ஆபத்தான குறட்டைகளின் அறிகுறியாகும். மரணத்தை ஏற்படுத்தும் குறட்டை .... தடுக்கும் வழிகள் என்னென்ன?இது உயர் ரத்த அழுத்தம், இதய அடைப்பு, இதய நோய்கள் போன்ற ஆபத்துகளை உண்டாக்கும். இந்த பிரச்சனையை சரி செய்ய மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. மேலும் குறட்டையை தவிர்க்க தூங்கும் பொழுது பக்கவாட்டில் திரும்பி படுத்து தூங்குவது உதவியாக இருக்கும். குறிப்பாக உடல் எடை இருப்பவர்கள் நிச்சயம் உடல் எடையை குறைக்க வேண்டும். மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும்.

தூங்கும் போது தொண்டையில் காற்று அடைப்பு ஏற்படுவதால் குறட்டை அதிகமாக இருக்கும் வரும். ஆகவே முகத்தை மேலே வைத்து தூங்க வேண்டும். சளி ஏதேனும் இருப்பின் அதனை நீக்கி சுத்தமாக வைக்க வேண்டும்.மரணத்தை ஏற்படுத்தும் குறட்டை .... தடுக்கும் வழிகள் என்னென்ன?

மேலும் தூங்குவதற்கு முன்பாக துளசி தேநீர் குடிப்பது நல்லது. இது தவிர வெல்லம், பச்சை இஞ்சி கலந்த சூடான தண்ணீரை குடிக்க வேண்டும். அடுத்தது சீரகம், பெருங்காயம் மிளகு ஆகியவற்றை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் குறட்டை சத்தங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வதே சிறந்தது.

MUST READ