நரம்பு சுண்டி இழுத்தால் என்ன செய்ய வேண்டும்? தீர்வுகளை காண்போம்!
பொதுவாக நரம்பு இழுத்தல் பிரச்சனை என்பது ஒரு நோய் கிடையாது. அது சத்து குறைபாட்டினால் ஏற்படுவது. அதாவது உடலில் நீர்ச்சத்து இல்லாமல் இருந்தாலும் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலும் இந்த பிரச்சனை உண்டாகும். பெரும்பாலானவர்களுக்கு இரவில் தூங்கும் போது ஏற்படும். தாங்க முடியாத வலியுடன் கால் விரல்கள் கோணிக் கொண்டு அப்படியே இருக்கும். இது காலின் மேல் மேல் பகுதியான தொடையிலும் வலியை உண்டாக்கும். தரையில் அதிக நேரம் அமர்ந்து இருப்பதால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இதன் காரணமாகவே வயதானவர்களுக்கு நீண்ட நேரம் தரையில் அமர்ந்திருக்க முடியாது.
பாட்டி சொன்ன வைத்தியம்:
முதலில் நரம்பு இழுத்தல் பிரச்சனையை சரி செய்ய அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர் சத்துக்களை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாதுளம் பழம், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம் போன்றவைகளை எடுத்துக்கொண்டால் நரம்பு சம்பந்தமான குறைபாடுகளை சரி செய்யலாம். அடுத்தது புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
ஊறவைத்து, முளைக்க வைத்த தானிய வகைகளை வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டால் நரம்பு சுண்டி இழுத்தல் பிரச்சனை ஏற்படாது.
அடுத்தது நரம்பு நாளங்களுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது. எனவே தினமும் இரண்டு ஸ்பூன் அளவு தேன் சாப்பிடுவது நல்லது.