இன்றுள்ள காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கையிலும் மொபைல் போன் தான் இருக்கிறது. அதிலும் தூங்குவதற்கு முன்பாக செல் போன் பயன்படுத்திவிட்டு தூங்குபவர்கள் பலர். இதனால் பல விளைவுகள் ஏற்படுகிறது என்பதை தெரிந்துமே பயன்படுத்துகிறார்கள். அதிலும் குழந்தைகள் செல் போனுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் உன் கூட செல் போன் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதாவது குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிடிக்கும் சமயத்தில் செல் ஃபோனை கையில் கொடுத்து சாப்பிட வைக்கிறார்கள் பல பெற்றோர்கள். இந்த பழக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதனை தடுக்க என்ன வழி என்பது எந்த பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை. இது குறித்து சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
முதலில் உங்களது செல்போன்களை குழந்தைகளிடமிருந்து தூரமாக வைக்க வேண்டும். குழந்தைகளின் கண்ணுக்கே தெரியாதவாறு வைக்க வேண்டும். குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் போது அவர்களுக்கு இதில் உள்ள ஆபத்தை மெதுவாக சொல்லி புரிய வையுங்கள். எனவே செல்போனை கொடு இல்லையென்றால் அடி விழும் என்று மிரட்டாமல் அன்பாக அறிவுரை சொல்லுங்கள். நிச்சயம் குழந்தைகள் கேட்பார்கள். குழந்தைகள் செல்போன் எடுத்தால் அதற்கு பதிலாக அவர்களுக்கு வேறு ஏதேனும் விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து அவர்களின் கவனத்தை திசை திருப்புங்கள். இல்லையென்றால் வேறு ஏதாவது வேலை கொடுங்கள். குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி சாப்பாடு கொடுங்கள். இவையெல்லாம் தினமும் பின்பற்றினாலே குழந்தைகள் எளிதில் செல்போனை மறந்து விடுவார்கள். இதை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெற்றோர்களும் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் உங்களைப் பார்த்து தான் குழந்தைகள் வளர்வார்கள்.