தமிழ்நாட்டில் புதியதாக கட்சியை தொடங்கியவர்களும், பழைய கட்சியானாலும் திமுக எதிர்த்து தான் வருகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எவ்வளவு நெருக்கடியான அரசு வேலைகளும் கட்சி வேலைகளும் எனக்கு இருந்தாலும் அதற்கிடையில் கொளத்தூர் வந்தால் எனக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார். கொளத்தூர் மட்டுமில்லாமல், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்றால் அதை விட மகிழ்ச்சி ஏற்படுகிறது. அனிதா அச்சீவர்ஸ் அக்காடமியில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளை பார்க்கும் பொழுது எனக்கு தானாக புத்துயிரும் உத்வேகமும் வந்து விடுகின்றது. அந்த உத்வேகத்தை பெறுவதற்காக தான் அடிக்கடி இங்கு வருகிறேன். தங்கை அனிதா இறந்த போது, தற்கொலை செய்து கொண்ட பொழுது நாம் எல்லோரும் தாங்க முடியாத சோகத்திற்கும் பெரிய வேதனைக்கும் நாம் ஆளானோம். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.
‘டைம் வேஸ்ட்..! வசவாளர்கள் வாழ்க’ விஜயை தாக்கிப்பேசிய முதல்வர் ஸ்டாலின்
அனிதா கனவை சிதைத்தது நீட் தேர்வு, அனிதா உயிரை பறித்துக் கொண்டது நீட் தேர்வு, நீட்டிற்கு எதிரான சட்டப் போராட்டம் இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. தமிழ்நாட்டு மக்களின் குரலுக்கு ஒன்றிய அரசு பணியத் தான் போகிறது. இன்று இல்லை என்றாலும் நாளை, நாளை இல்லை என்றாலும் நாளை மறுநாள் அது நடக்கும், என முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் திட்டங்களை களத்தில் சென்று பார்க்கக்கூடிய முதலமைச்சராக நான் இருக்கிறேன்.
நாளை கோவை செல்கிறேன், அங்கே பல திட்டங்களை தொடங்கி வைக்க செல்கிறேன். இப்படிப்பட்ட செயல்பாடுகள் தான் தமிழ்நாட்டின் அச்சீவ்மெண்ட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2 நாள் பெய்த மழைக்கு சாலையில் மழைநீர் தேங்கவில்லை. திமுக வளர்ச்சி சில ஊடங்களுக்கு பிடிக்கவில்லை. புதியதாக கட்சி தொடங்குபவர்கள், ஏற்கனவே தொடங்கியவர்கள் திமுக அழிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. திமுக தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வரும் கட்சி. 1949ல் தொடங்கி 1967ல் தான் ஆட்சிக்கு வந்தது. அதுவரை பல போராட்டங்களை, தியாகங்களை செய்துதான் ஆட்சிக்கு வந்தது. என்றும் தனது உரையில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்…