spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்குழந்தை தொழிலாளிகளை போலீசார் மீட்டனா் – உரிமையாளர் கைது

குழந்தை தொழிலாளிகளை போலீசார் மீட்டனா் – உரிமையாளர் கைது

-

- Advertisement -
kadalkanni

வளசரவாக்கத்தில்  வீட்டு வேலைகளுக்கு முன் பணம் குடுத்து சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் வந்துள்ளது.அதன்அடிப்படையில் சோதனை நடத்திய போலீசார் அவா்களை  மீட்டனர்.குழந்தை தொழிலாளிகளை போலீசார் மீட்டனா் – உரிமையாளர்  கைது

சென்னை வளசரவாக்கம் திருப்பதி நகரில் வசிப்பவர் ரஷிதா (49). இவரது வீட்டில் சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும், அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வளசரவாக்கம் விஏஓ தங்கபாண்டியன் புகார் அளித்தார். அதன்படி ரஷிதா வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், 13 வயது சிறுவன், 17 வயது சிறுமி, ரேஷ்மா (20), சந்தியா (20), சபாபதி ராதா (34) ஆகிய ஐந்து பேரையும் மீட்டனர். அவர்களை அரசு காப்பகத்திற்கு அனுப்பிய போலீசார், வீட்டின் உரிமையாளர் ரஷிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ரேஷ்மா என்ற பெண்க்கு ஆறு வருடங்கள் பணிபுரிய ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், 17 வயது சிறுமிக்கு மூன்று வருடங்கள் பணிபுரிய மூன்று லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடத்திற்கு பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கை பதிவு செய்துள்ள போலீசார் ரஷிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்!

MUST READ