spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மக்கள் மகிழ்ச்சி.... புலம்பும் எடப்பாடி பழனிசாமி.. நினைப்பு எல்லாம் பெட்டியில்தான்: முதல்வர்

மக்கள் மகிழ்ச்சி…. புலம்பும் எடப்பாடி பழனிசாமி.. நினைப்பு எல்லாம் பெட்டியில்தான்: முதல்வர்

-

- Advertisement -

 

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தினசரியும் அறிக்கை விட்டு புலம்பி வருவதாகவும் அவர் நினைப்பு எல்லாம் பெட்டியிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

we-r-hiring

தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கொடுக்கும் வரவேற்பை பார்க்கும் போது நன்றாக தெரிகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தினமும் புலம்பிக் கொண்டு இருக்கிறார். தனது உட்கட்சி, கூட்டணி பிரச்சனையை மறைப்பதற்காக தினமும் அறிக்கை வெளியிட்டு அரசியல் செய்து வருகிறார் பழனிசாமி.

இந்த அறிக்கையையாவது, உண்மையான நிலவரங்களை தெரிந்து கொண்டு வெளியிடுகிறாரா? என்றால் அதுவும் இல்லை. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் பெட்டிச் சாவி தொலைந்து விட்டதா? என பழனிசாமி கேட்கிறார். அவர் நினைப்பு பெட்டியில் தான் இருக்கிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் 100 வது நாளில் 32,000 பேருக்கு பட்டா, 30,000 பேருக்கு ஓய்வூதியம்,10,000 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது.

செய்திகளைப் பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து அரசு சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்படுகிறது. பத்திரிகை, டிவி செய்திகளில் வருகிறது. சமூக ஊடகங்களில் வருகிறது. அப்போதும் செய்திகளை படிக்க மாட்டேன், பார்க்க மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்றார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தஞ்சாவூரில் கலைஞர் பெயரிலான புதிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு 40 நாட்கள் ஆகியும் இன்னும் ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது ஆளுநர் மாறி இருப்பார் என்று பார்த்தால் அவர் இன்னும் மாறவில்லை. உயர் கல்வி அமைச்சருக்கும் நேரம் கொடுக்க மறுக்கிறார்.

நேரம் கொடுத்தால் ஏதாவது கேட்பார்கள் என்பதற்கு பயந்து அவர் நேரம் கொடுக்க மறுக்கிறார். இதைவிட ஒரு ஆளுநருக்கு வேறு எண்ண வேலை இருக்கிறது என? தமிழ்நாட்டு மக்கள் கேள்வி கேட்கிறார்கள்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

 

MUST READ