spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அறுசுவை விருந்து! முண்டியடித்த பா ம க தொண்டா்கள்!

அறுசுவை விருந்து! முண்டியடித்த பா ம க தொண்டா்கள்!

-

- Advertisement -

பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கு பெற்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறுசுவை சைவ விருந்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழங்கினாா்.அறுசுவை விருந்து! முண்டியடித்த பா ம க தொண்டா்கள்!பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற வருகின்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த தொண்டர்களுக்கு அறுசுவை சைவ விருந்து பரிமாறப்பட்டது. குலோப் ஜாமுன், காஜு கத்திலி, மசால் வடை, அப்பளம், உருளைக்கிழங்கு சிப்ஸ், மஸ்ரூம் பிரியாணி, தயிர் பச்சடி, சாம்பார் சாதம், முட்டைக்கோஸ் பொரியல், உருளைக்கிழங்கு வருவல், காலிஃப்ளவர், பக்கோடா, சாதம், வத்தக்குழம்பு, ரசம், அவியல் மோர் குழம்பு, பாயாசம், என அறுசுவை விருந்து தொண்டர்களுக்கு பரிமாறப்பட்டு வருகின்றது.

பொதுக்குழு கூட்டம் அரங்கத்தினுள் நடைபெற்று வரும் நிலையில் வெளியே வளாகத்தில் தொண்டர்களுக்கு 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து தொண்டர்களுக்கு அறுசுவை சைவ விருந்து அளிக்கப்படுகின்றது. ஒரே இடத்தில் உணவு வழங்கப்பட்டு வருவதால் பாமக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு உணவுகளை வாங்கி வருகின்றனர்.

தமிழ் நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு!

we-r-hiring

MUST READ