Homeசெய்திகள்அரசியல்விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - பீட்டா இந்தியா கோரிக்கை

விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – பீட்டா இந்தியா கோரிக்கை

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின்  தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக பீட்டா இந்தியா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - பீட்டா இந்தியா கோரிக்கைசமீபத்தில் வெளியான ஊடகச் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில், புறாக்களுக்குக் கட்சி வண்ணம் பூசப்பட்டு அவை பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்படுவதைக் காண முடிகிறது.

இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் பீட்டா இந்தியாவிற்கு வந்துள்ளன. ​ 2012-ஆம் ஆண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இச்செயல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக அமைந்துள்ளது.

we-r-hiring

புறாக்கள் மிகவும் உணர்ச்சிகரமான பறவைகள். அவற்றின் மீது பூசப்படும் சாயங்கள் மற்றும் பெயிண்ட்டுகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இது அவற்றின் இறக்கைகள் மற்றும் தோலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மக்கள் கூட்டமும், சத்தமும் நிறைந்த சூழலில் பறவைகளைக் கையாள்வது அவற்றுக்கு அதீத மன அழுத்தத்தையும் காயம் அல்லது மரணத்தையும் கூட ஏற்படுத்தக்கூடும். இறக்கைகளில் வண்ணம் பூசுவது அவற்றின் பறக்கும் திறன், உடல் வெப்பத்தைப் பராமரிக்கும் தன்மை மற்றும் இயல்பான நடத்தையைச் சிதைக்கும்.

​விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் கீழ் விலங்கிற்கு தேவையற்ற வலி அல்லது துன்பத்தை ஏற்படுத்துவது மற்றும் விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை உட்கொள்ளச் செய்வது அல்லது பூசுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

வண்ணம் பூசப்பட்ட அந்தப் புறாக்களைப் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்காகப் பீட்டா இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களில் இனி ஒருபோதும் விலங்குகளைப் பயன்படுத்துவதில்லை என்ற எழுத்துப்பூர்வமான கொள்கையைத் தவெக தலைமை அறிவிக்க வேண்டும். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு விலங்குகள் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

​அரசியல் களத்தில் ஒரு பொறுப்பான மற்றும்  அணுகுமுறையை வெளிப்படுத்தும் வகையில், விலங்குகள் வதையைத் தவிர்க்கத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை முன்வர வேண்டும் என்று பீட்டா இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

தவெக ஆன்லைன் பிரச்சார விவகாரம் – தேர்தல் ஆணையத்திடம் அடுத்தடுத்து குவியும் புகார்களால் பரபரப்பு

MUST READ