2026 தேர்தல்: கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளா் VS.பாபு முன்னிலை வகிக்கிறாா்.
கருத்துக் கணிப்பு முடிவுகளை பொய்யாக்கும் வகையில், தமிழ்நாடு அரசியல் களம் மாறியுள்ளது. திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என பொரும்பாலான கணிப்புகள் வெளியாகின. ஆனால், 100+ தொகுதிகளில் முன்னிலை பெற்ற தவெக முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில், 70+ தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றள்ளது. இதனால், ஆளுங்கட்சியான திமுக மூன்றாமிடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் முதல்வா் ஸ்டாலின் தொடா்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறாா். 2வது சுற்று முடிவின்படி VS.பாபு 8,393 வாக்குகளும், ஸ்டாலின் 7,159 வாக்குகளும் பெற்றனா். அதிமுக வேட்பாளா் சந்தான கிருஷ்ணன் 2,226 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளார். ஸ்டாலின் தொடா்ந்து பின்னடைவை சந்தித்து வருவதால் திமுகவினா் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

