Homeசெய்திகள்அரசியல்அதிமுக கூட்டணியில் தேமுதிக? - பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்!

அதிமுக கூட்டணியில் தேமுதிக? – பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்!

-

 

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன், தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். பாஜகவை பொறுத்தவரையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், பாஜக மாற்று கூட்டணியை அமைத்து வருகிறது. இதேபோல் பாஜக அல்லாத கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிமுக முடிவு

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன், தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது தேதிமுக தரப்பில் கேட்கப்பட்ட 4 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதிகள் வழங்க அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடதக்கது.

MUST READ