Homeசெய்திகள்அரசியல்தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு

தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு

-

தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசில் பிரதமர் மோடியின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளுங்கட்சியான திமுக தங்களது தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி வருகிறது. தற்போது கூட்டணிகளில் உள்ள மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட 6 கட்சிகளுக்கும் 9 தொகுதிகள் பங்கீட்டு முடிவடைந்துள்ளது.திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒதுக்கீடு குறித்து இன்று மாலை கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த நிலையில், தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டி இல்லை என அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் – மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களும் இன்று (9-3-2024) கலந்து பேசியதில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதெனவும். வருகிற 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

MUST READ