spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல் பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்று வலியுறுத்தியவர் அம்பேத்கர் - கமல்ஹாசன்

 பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்று வலியுறுத்தியவர் அம்பேத்கர் – கமல்ஹாசன்

-

- Advertisement -

“அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது.” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்று வலியுறுத்தியவர் அம்பேத்கர் - கமல்ஹாசன்

we-r-hiring

இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கரின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர்தான் இந்தியாவை விடுவித்தார்.

அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார்.

நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம், அரசியல் சாசனம் உருக்கொண்டதன் 75-ம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

‘இந்தியன் 3’ தியேட்டரில் தான் வெளியாகும்…. இயக்குனர் சங்கர் பேட்டி!

MUST READ