மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

விஜயின் தவெக இரண்டாவது ஆண்டு விழாவிற்கு 2500 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் போதிய ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை என நிர்வாகிகளே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையாக காலை உணவு கூட வழங்கவில்லை.ஆகையால் மயக்கத்திலும், சோர்விலும் விழாவில் பங்கேற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தவெக முதலாமாணடு ஆண்டு விழாவில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் நிகழ்ச்சிகளை படம்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், விழாவை படம்பிடித்துக் கொண்டிருந்த குமுதம் நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் இளங்கோவனை நெஞ்சில் தாக்கி பவுன்சர்கள் தள்ளி விட்டுள்ளனர். இதில் இளங்கோவன் தரையில் சரிந்தார். மயங்கிய அவரை சக செய்தியாளர்கள் ஆசுவாசப்படுத்தி ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவ சிகிச்சை அனுப்பி வைத்துள்ளனர்.
ஏற்கெனவே மற்றொரு நுழைவு வாயிலில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினரை பவுன்சர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து தாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதாகவும் கூறப்படுகிறது. செய்தியாளர்களுக்கு அலுவல் ரீதியாக விழாவிற்கான பாஸ் வழங்கப்பட்டிருந்தாலும் பவுன்சர்கள் அராஜகத்தால் தடுத்து நிறுத்துவதாகவும் செய்தியாளர்கள் கடும் குற்றம்சாட்டி வருகின்றனர்.