spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அம்பத்தூரில் பேரறிஞர் அண்ணா  116 வது பிறந்த நாள்  விழா

அம்பத்தூரில் பேரறிஞர் அண்ணா  116 வது பிறந்த நாள்  விழா

-

- Advertisement -

அம்பத்தூரில் பேரறிஞர் அண்ணா  116 வது பிறந்த நாள்  விழாகள்ளக்குறிச்சி சென்று எட்டிப் பார்க்க முடியாத முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடு ஈட்ட செல்வதாக கூறுகிறார் என அதிமுக கழக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் இன்ப துரை குற்றச்சாட்டுகிறார்.

திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது கஞ்சா விற்பனையில் தான் என திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அலெக்ஸாண்டர் குற்றச்சாட்டுகிறார்.

அம்பத்தூரில் பேரறிஞர் அண்ணா  116 வது பிறந்த நாள்  விழா

அம்பத்தூரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி மற்றும் பொது கூட்டம் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திருவள்ளுர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

நீங்க ரூ.2000-ம் னா.. நாங்க ரூ.2100..காங்கிரஸ் – பாஜக இடையே போட்டா போட்டி!

we-r-hiring

நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன, நிகழ்ச்சியில் பேசிய கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கள்ளக்குறிச்சியில் 70-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி இறந்த நிலையில் கூட கள்ளக்குறிச்சி சென்று எட்டிப் பார்க்காத தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடு கொண்டு வருவதாக கூறியதை குற்றம் சாட்டி பேசினார்.

அம்பத்தூரில் பேரறிஞர் அண்ணா  116 வது பிறந்த நாள்  விழாஇதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர் விடியா திமுக ஆட்சியில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பது கஞ்சா விற்பனையில் தான் என குற்றம் சாட்டினார். நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் ஜான், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவரசன் வட்டச் செயலாளர்கள் மாவட்ட கழக நிர்வாகிகள் வட்ட கழக நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

MUST READ