Homeசெய்திகள்அரசியல்"சி.வி.சண்முகத்தைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை"- கரு.நாகராஜன் பேட்டி!

“சி.வி.சண்முகத்தைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை”- கரு.நாகராஜன் பேட்டி!

-

 

"சி.வி.சண்முகத்தைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை"- கரு.நாகராஜன் பேட்டி!
File Photo

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (ஜூன் 13) பிற்பகல் 02.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், “கூட்டணி என்பது பொதுவான ஒன்று; கூட்டணியில் பெரியண்ணன் என்பது இல்லை. கூட்டணியை முடிவு செய்வது பா.ஜ.க. தலைமை; கூட்டணியை முடிவு செய்யும் போது மாநில தலைவரிடம் பேசுவர். கூட்டணியில் பெரியண்ணன் வேலையை யாரும் செய்யக் கூடாது.

டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கூட்டணியைத் தீர்மானிக்க இன்னும் காலம் உள்ளது; அண்ணாமலை மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்ததை எதிர்க்கிறோம். அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழகத்தில் மாபெரும் மரியாதை கூடியுள்ளது. அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. உதவியது. தி.மு.க.வுக்கு வாய்ப்பளிக்கும் சூழ்நிலையை அ.தி.மு.க.வினர் உருவாக்கக் கூடாது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சரியாக பேச வேண்டும்.

அண்ணாமலை குறித்து பேசிய முன்னாள் அமைச்சர்களை எடப்பாடி பழனிசாமி கண்டிப்பார் என நினைத்தேன். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அண்ணாமலை மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு பொறாமை உள்ளது. அண்ணாமலையை பற்றி விமர்சனம் செய்ய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியில்லை. பொம்மை தலைவர் அல்ல; தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தலைவர் அண்ணாமலை.

தேசிய மருத்துவ தகுதி தேர்வை கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

அண்ணாமலையை பொம்மை என செல்லூர் ராஜு கூறுவது தான் கோமாளித்தனமாக உள்ளது. தான் பேசிய பின் என்ன பேசினோம் என்பதே சி.வி.சண்முகத்திற்கு தெரியாது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. யார் யாருக்கு சுமை, யார் யாரை சுமந்தனர் என்பது மக்களுக்குத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ