spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

-

- Advertisement -

டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

டாஸ்மாக் சரக்கு வாகன ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

ஈரோடு திண்டல்- சக்தி நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் ஒப்பந்த அடிப்படையில் சரக்குகளை அனுப்பும் (goods transport) லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் மதுபான கிடங்குகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்களை ஒப்பந்த அடிப்படையில் விநியோகம் செய்து வருகிறார்.

we-r-hiring

ஈரோட்டில் சச்சிதானந்தம் வீட்டிலும், அவரது செங்கோடம்பாளையம் அலுவலகத்திலும் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் அமலாக்க துறை அதிகாரிகள் இரண்டு பேர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் சச்சிதானந்தம் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ