spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காங்கிரஸ் ஒன்று கூடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் - நிதிஷ்குமார்

காங்கிரஸ் ஒன்று கூடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் – நிதிஷ்குமார்

-

- Advertisement -

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒன்று கூடி போராடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் என ஐக்கிய தனதா தள தலைவர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

we-r-hiring

2024 மக்களவைத் தேர்தலுக்கு மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஒர் அணியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார் தலைமையிலான ஓர் அணியும், தேசிய மற்றும் பிராந்திய காட்சிகளை ஒன்றிணைக்க பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ள நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற சிபிஐ-எம் கட்சியின் 11வது பொது மாநாட்டில் பேசிய நிதிஷ் குமார், காங்கிரஸ் கட்சி கூட்டணிகளுடன் இணைந்து பணியாற்றப் போகிறதா? என்ற முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்த போராடினால் 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 100 இடங்களுக்கும் குறைவாகவே பெறுவார்கள். ஒருவேளை காங்கிரஸ் கட்சி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்றால் நாட்டில் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என அக்கூட்டத்தில் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

MUST READ