Homeசெய்திகள்அரசியல்பாஜகவின் நயவஞ்சகம்: வதந்தி பரப்பியதே மோடிதான்... எடுத்துச் சொன்னால் உரைக்குதோ..? ஆதாரம் இதோ..!

பாஜகவின் நயவஞ்சகம்: வதந்தி பரப்பியதே மோடிதான்… எடுத்துச் சொன்னால் உரைக்குதோ..? ஆதாரம் இதோ..!

-

- Advertisement -

தொகுதி மறுசீரமைப்பு வந்தால் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று தேவையற்ற வதந்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பரப்பி வருவதாகச் சிலர் புலம்பி வருகிறார்கள்.

இப்படி தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று முதலில் சொன்னவர் முதலமைச்சர் அல்ல. 2023 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் பரப்புரை செய்ய வந்த பிரதமர் மோடி அவர்கள், “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் சமூகங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சொல்கிறது. அடுத்ததாக தொகுதி மறுவரையறை நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சொல்வதைப் போல மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்க நேரிடும். தென்னிந்திய மக்கள் இதனை ஏற்பார்களா?” என்று கேட்டார் பிரதமர்.

இதனடிப்படையில் பார்த்தால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதை முதலில் சொன்னவர் பிரதமர் நரேந்திர மோடி தான்! அரசியல், பொருளாதாரச் செயல்பாட்டாளராக இந்திய அளவில் அறியப்படுபவர் யோகேந்திர யாதவ். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆலோசகராக இருந்தார். 2010 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தை உருவாக்குவதற்கான தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். சமூக ஆய்வு மையத்தின் உறுப்பினர். ஆம் ஆத்மி கட்சியில் தொடக்கத்தில் இருந்தார். இப்போது வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுடன் இணைந்து ‘ஸ்வராஜ் அபியான்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவரது கட்டுரைகள், இந்தியா முழுமைக்குமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

யோகேந்திர யாதவ், தொகுதி மறுசீரமைப்பு குறித்து எழுதிய கட்டுரை, ‘ஆனந்த விகடன்’ இதழில் (26.3.2025) வெளியாகி உள்ளது. ‘தொகுதி மறுசீரமைப்பு என்கிற பேராபத்து’ என்பதுதான் அதன் தலைப்பு. “நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை – ஒரு மாநிலத்தில் அதிகமாக்கும் அல்லது குறைக்கும் இந்த நடைமுறையை – நிரந்தரமாக நிறுத்தி வைப்பதே இந்தியா எதிர்கொள்ள இருக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும்” என்று அவர் எழுதி இருக்கிறார்.

“உத்தேச மக்கள்தொகை அடிப்படையில் 2026– ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகள் எப்படிப் பகிர்ந்து அளிக்கப்பட வாய்ப்புள்ளது என மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜேமி ஹின்ட்சன் ஆய்வு செய்தனர். இப்போதைய மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கையில் இந்த ஆய்வைச் செய்தபோது, தென்னிந்திய மாநிலங்கள்தான் அதிகம் பாதிக்கப்படுபவையாக உள்ளன. தமிழ்நாடு 8 தொகுதிகளையும், கேரளா 8 தொகுதிகளையும், ஆந்திராவும் தெலங்கானாவும் இணைந்து 8 தொகுதிகளையும், கர்நாடகா 2 தொகுதிகளையும் இழக்கும். பெரிய அளவில் இழக்கும் மற்றவையும் இந்தி பேசாத மாநிலங்களே!

மேற்கு வங்காளம் 4 தொகுதிகளையும், ஒடிசா 3 தொகுதிகளையும், பஞ்சாப் ஒரு தொகுதியையும் இழக்கும். இந்தி பேசும் மாநிலங்களில் உத்தரகாண்டும் இமாசலப் பிரதேசமும் மட்டுமே தலா ஒரு தொகுதியை இழக்கின்றன. மற்றவர்களுக்குக் கூடுதல் தொகுதிகள்தான் கிடைக்கின்றன. உ.பி.க்கு 11, பீகாருக்கு 10, ராஜஸ்தானுக்கு 6, மத்தியப் பிரதேசத்துக்கு 4 என தொகுதிகள் ஆதாயம்.

இந்தத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது இந்தி பேசும் மாநிலங்களுக்கும், இந்தி பேசாத தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான முரண்பாட்டை இன்னும் மோசமாக்கிவிடும்.

தற்போது மக்களவையின் 543 தொகுதிகளில் இந்தி மாநிலங்கள் 226 தொகுதிகளைப் பெற்றுள்ளன. தொகுதி மறுவரையறையில் இது 259 ஆக உயரும். இது கிட்டத்தட்ட பெரும்பான்மை எண்ணிக்கை. தற்போது 132 இடங்களுடன் இருக்கும் தென்னிந்திய மாநிலங்கள் இன்னும் எண்ணிக்கை குறைந்து பலவீனமாகும். அவை கிழக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களுடன் இணைந்து முயற்சி செய்தாலும், நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத் திருத்தங்களை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியாத நிலை ஏற்படும்” – என்று எழுதி இருப்பவர் யோகேந்திர யாதவ்.

“நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வந்தால் அது பா.ஜ.க.வின் அதிகாரத்தை மேலோங்கச் செய்யும்” என்று ‘தி இந்து’ நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. வர்கீஸ் கே.ஜார்ஜ், விக்னேஷ் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் இணைந்து எழுதிய கட்டுரையில், “தொகுதி எல்லை மறுவரையானது, தீபகற்ப மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைக் குறைக்கும். மத்திய மாநிலங்களின் அதிகாரத்தை அதிகரிக்கும். பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் அதிகாரத்தைக் குறைத்து, பா.ஜ.க.வுக்கு வலுசேர்க்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தொகுதிகளின் எண்ணிக்கை நமக்கு எந்தளவுக்கு குறையும், உ.பி.க்கு எந்தளவுக்கு அதிகமாகும் என்று முதலமைச்சர் சொல்லி இருப்பதை இக்கட்டுரையாளர்களும் உறுதி செய்துள்ளார்கள். பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு மிகுந்த மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் இவர்கள் சொல்லி இருக்கிறார்கள். மாநிலக் கட்சிகளின் வலிமையைக் குறைத்து, தேசிய அரசியலில் தென் மாநில அரசியல் கட்சிகளின் பங்களிப்பைக் குறைத்து, பா.ஜ.க.வின் தேசிய வலிமையை இவை அதிகரிக்கும் என்றும் இக்கட்டுரையாளர்கள் துல்லியமாகக் கணித்துள்ளார்கள்.

ஒருவிதமான புவியியல் வகைப்பட்ட பிளவை உருவாக்குகிறார்கள் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது ‘தி இந்து’. ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலையங்கமும் இதனை உறுதி செய்துள்ளது. மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்வது வதந்தி அல்ல, உண்மைதான் என்பதை உறுதிப்படுத்த இவை போதுமானது.

MUST READ