Homeசெய்திகள்அரசியல்இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக போராடும் - முத்தரசன்

இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக போராடும் – முத்தரசன்

-

- Advertisement -

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக போராடும்.

we-r-hiring

இடைத்தேர்தல் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.

தமிழர்களுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிராக, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக,  ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பல்வேறு விதங்களில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது. தமிழ் மொழிக்கு வழங்கப்படும் நிதியை விட சமஸ்கிருதத்துக்கு பல மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்நாட்டு மக்களை புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு இருக்கும் என உறுதிபட தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளிக்கும் பேட்டி மற்றும் அறிக்கைகள் மிகவும் கேலிக்கூத்தாக இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற வாய்ப்பே இல்லை.

பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்தை தமிழ்நாட்டில் புகுத்த வேண்டும் என்பதற்காக தான் அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். அப்படிப்பட்ட ஆதிக்கத்தை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது.

இந்து சமய அறநிலைத்துறையின் வரலாற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் அண்ணாமலை உளறிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையின் கனவு தமிழ்நாட்டில் பலிக்காது என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

MUST READ