spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்டெல்லியில் பாஜக-வால் பரபரப்பு… அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது கல் வீசி தாக்குதல்..!

டெல்லியில் பாஜக-வால் பரபரப்பு… அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது கல் வீசி தாக்குதல்..!

-

- Advertisement -

பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீசி தாக்கியதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

we-r-hiring

டெல்லியில் தேர்தல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளது. அதில்ல், ‘பாஜக தோல்விக்கு பயந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை அக்கட்சியின் குண்டர்களால் தாக்கியதாக” கூறியுள்ளது.

https://x.com/AamAadmiParty/status/1880572930943513046

பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மா பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, ​​பிரவேஷ் வர்மாவின் குண்டர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை செங்கல், கற்களால் தாக்கி, அவர் பிரச்சாரம் செய்ய முடியாதபடி காயப்படுத்த முயன்றதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. ”பாஜக தொண்டர்களே… உங்கள் கோழைத்தனமான தாக்குதலுக்கு கெஜ்ரிவால் ஜி பயப்படப் போவதில்லை, டெல்லி மக்கள் உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என ஆம் ஆத்மி கட்சியினர் ஆத்திரத்துடன் கூறியுள்ளனர்.

MUST READ