‘‘அண்ணா திமுக- நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற யூகமான கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்க முடியாது’’ என்று அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் ‘‘அண்ணா திமுகவின் வாக்குகளை எந்த சூழ்நிலையிலும் நடிகர் விஜய்யால் ஈர்க்கவோ, பிரிக்கவோ முடியாது; நடிகர் விஜய், எம்ஜிஆரை புகழ்ந்து பேசியதில் எந்த தவறும் இல்லை. நல்ல ஆட்சி கொடுத்த எம்ஜிஆரை, விஜய் முன்னிறுத்துவதில்
என்ன தவறு ?”
ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என முன் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விஜய் கட்சியின் கொள்கை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் சூழலுக்கு தக்கவாறு முடிவு செய்யப்படும். ஒத்த கருத்துள்ள கட்சிகலுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். தவெக மாநாட்டில் அதிமுக பற்றி விஜய் எதுவும் பேசவில்லை.
அப்படியென்றால் அதிமுக சிறப்பாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. விஜயின் கருத்தை சரியா ? தவறா? எனக் கூற முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அதன் அடிப்படையில் ஆட்சியில் பங்கு பற்றி விஜய் தனது நிலைப்பாட்டை கூறியுள்ளார். ஒரு நல்ல எண்ணத்தின் அடிப்படையில் மாநாட்டில் விஜய் பேசியுள்ளார். தனது கருத்துக்களை கூறுவது அவரது சுதந்திரம்’’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.