Homeசெய்திகள்அரசியல்என்னங்கடா வித்த காட்றீங்க..? தவெக விஜய் குறித்து கடுப்பான ஹெச்.ராஜா..!

என்னங்கடா வித்த காட்றீங்க..? தவெக விஜய் குறித்து கடுப்பான ஹெச்.ராஜா..!

-

- Advertisement -

”சினிமாவில் நடப்பது போல் அரசியலில் என்ன வேண்டும் செய்யலாம் என்று நினைக்காதீர்கள். அது நடக்காது” என தவெகவுக்கு பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தவெக 2026-ல் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் சொல்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா, ” அவர் பெயர் வெங்கட்டா? அவர் என்கிட்டு இருக்கிறார் என்பதே இப்போதுதான் தெரியும். தவெக முதலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். டெபாசிட் வாங்க வேண்டும். அதெல்லாம் உங்களால் முடியாது.

தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!

சினிமாவில் நடப்பது போல் என்ன வேண்டும் செய்யலாம் என்று நினைக்காதீர்கள். ஒருத்தரை வைத்துக் கொண்டு, அவர் சொல்வதை வைத்து என்னங்கடா வித்தை காட்டுறீங்க..? தமிழக பாடல்கள் கழக திட்டத்தின் லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி. சினிமா பாட்டு பாடிக்கிட்டு இருக்கிற ஒருத்தரை பாடநூல் நிறுவனத்திற்கு போட்டால் எவ்வளவு அசிங்கம் இது. ஒரு அருவருத்தக்க அரசாங்கம், அதனால் பண்ணி இருக்கிறது. அதை பற்றி நீங்கள் விசாரித்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.

MUST READ