Homeசெய்திகள்அரசியல்கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல,  கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன்! - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல,  கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன்! – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

-

- Advertisement -

கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல,  கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன்! என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவுக்கோரி அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில்  சந்தித்தார்.

we-r-hiring

இந்த சந்திப்பின் போது, அவரோடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, கோபண்ணா, செல்வ பெருந்தகை, கே.வி தங்கபாலு, காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் அசல் மௌலானா ஆகியோர் உடன் இருந்தனர்.

கமல்ஹாசனை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியபோது,

கமல்ஹாசனை சந்தித்து ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான எனக்கு ஆதரவு தர வேண்டும்,  திமுக கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என எங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளோம். நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

கமல் ரத்தத்தில் தேசியமும், காங்கிரசும் கலந்துள்ளது. அவரது தந்தை காங்கிரஸ் கட்சியில் தியாகியாக இருந்தவர். காமராஜருக்கு நெருக்கமானவர். எனவே, காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.

எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுள்ளோம். நிர்வாகிகளோடு பேசி முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு நல்ல முடிவை இன்று அவர் அறிவிப்பார்.

அதேபோல், ஈரோட்டில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் விருப்பத்தை தெரிவித்துள்ளோம். கண்டிப்பாக அதை செய்வார் என நம்புகிறேன்.

கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல  கைக்கு வாக்கும் சேகரிப்பார்! என நம்புகிறேன். என் மனதளவில் அவர் உத்தரவு தந்து விட்டார் என்று தான் நம்புகிறேன்.

ஒருவேளை கமல் ஆதரவு தரும் பட்சத்தில் இந்த கூட்டணி அடுத்தடுத்த தேர்தல்களில் தொடருமா என்ற கேள்விக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக உள்ளது அதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

பாஜக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளை பதவி இழக்க செய்து, அதிகாரத்தை வைத்து மிரட்டி ஆள் சேர்க்கிறார்கள். நாங்கள் கொள்கை ரீதியான ஆட்களை சந்தித்து வருகிறோம்.

கமல்ஹாசன் மத சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர். சாதி வித்தியாசம் அவருக்கு கிடையாது. திமுக கூட்டணிக்கு அவர் அதரவு தருவார் என நம்புகிறோம்.

அதிமுக 2 ஆக உடையவில்லை 4 ஆக உடைந்துள்ளது. கண்டிப்பாக அதிமுகவை பொறுத்தவரை 4 பேரும் சேர்ந்து பாஜகவை ஆதரிக்கும் வகையில் பாஜக அதிகாரத்தை பயன்படுத்தும்.

கடந்த தேர்தலில் கமல்ஹாசன் கட்சி சுமார் 11,000 வாக்குகள் பெற்றுள்ளனர். இது சாதாரண விஷயம் இல்லை. மக்கள் மத்தியில் கமல் செல்வாக்கு பெற்றுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக முறைப்படி சந்திப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பாஜக முறையை பின்பற்ற மாட்டோம்.

பிரிந்துள்ள 4 அதிமுக கட்சிகளும் பாஜகவுக்கு ஜாலரா அடிக்கும் கட்சிகளாக உள்ளது. அந்த தொகுதியில் பாஜகவை நிற்க வைத்து 4 கட்சிகளும் பாஜகவிற்கு ஆதரவு தருவதற்கான வாய்ப்புகள் அதிகம்  அதை நான் வரவேற்கிறேன் என தெரிவித்தார்.

MUST READ