தேர்தலுக்காக பா.ம.க. டிராமா போடுவதாக எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்குதல் !
இடஒதுக்கீடு குறித்து பாட்டாளிமக்கள் கட்சி டிராமா போடுவதாகவும் தேர்தல் நேரத்தில் மட்டுமே இட ஒதுக்கீடு குறித்து பாமக பேசுவதாக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வேளான் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் எம் பி-கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் திமுகவில் உழைக்கிறவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் , திமுக வேட்பாளராக உள்ள அன்னியூர் சிவாவை எதிர்த்து நிற்கும் பாமக வேட்பாளர் வாழ்த்து கூறிவிட்டு சென்றது தனக்கு தெரியும் என்றும் இடஒதுக்கீடு என்று கூறி பாமக டிராமா போடுவதாகவும் தேர்தல் நேரத்தில் மட்டுமே இடஒதுக்கீடு குறித்து பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.
பொறுத்தார் பூமிi ஆள்வார் என்பது போல் பல்வேறு முறை திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் ஆகுவதற்கு கேட்டு தற்போது கிடைத்துள்ளதாகவும் அனைத்து கட்சியினருடன் சகஜமாக பழகும் வேட்பாளர் தான் சிவா என தெரிவித்தார்.