spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பொதுக்குழு தீர்மானம்: திமுகவுக்கு - கண்டனம்... பாஜகவுக்கு- வலியுறுத்தல்... அதிமுக ஆளுமை இவ்வளவுதானா?

பொதுக்குழு தீர்மானம்: திமுகவுக்கு – கண்டனம்… பாஜகவுக்கு- வலியுறுத்தல்… அதிமுக ஆளுமை இவ்வளவுதானா?

-

- Advertisement -

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் அரங்கில், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக எம்.ஜி.ஆர்- ஜானகி 100 ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.

we-r-hiring

டங்ஸ்டன் தொழிற்சாலையை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாட்டுக்கான நிதி பகிர்வை பாரபட்சம் இன்றி வழங்கிடவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உயர் மன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து ஆங்கிலத்தில் தொடர மத்திய அரசுக்கு வலியுறுப்பட்டுள்ளது.

கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்புகளையும் வழங்கிட வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க திமுக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பார்முலா 4 கார்பந்தயம் , பேனா சிலை வைப்பது பூங்காக்கள் அமைப்பது என மக்கள் வரிப்பணத்தை வீணடிககும் திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக பொது குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு போதை பொருட்கள் நடமாட்டம் விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வு சொத்துவரி உயர்வு வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பீடு உயர்வு ஆகிய உயர்வை கண்டித்து திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் சேர்த்தல் நீக்குதல் போன்றவற்றின் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதை சரி செய்திடவும் தேர்தல் நியாயமாக நடத்தப்படவும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக என தீர்மானத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட குடி வராமத்து திட்டம் தடுப்பணைகள் திட்டம் அணைகள் ஏரிகள் குளங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேமிக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்த தவறியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் 2026ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

MUST READ