Homeசெய்திகள்அரசியல்இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்

இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்

-

இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்
கருணாநிதி வைகோ

ரொம்ப காலமாகவே புரட்சிப்புயல் வைகோவின் கட்சிக்குள் பெரும் அதிருப்திப் புயல் அடித்து வருகிறது. தனது மகன் மு. க. ஸ்டாலினை முன்னிறுத்தியதால் அந்த வாரிசு அரசியலை எதிர்த்து வெளியேறினார் கலைஞர் கருணாநிதியின் முக்கிய தளபதியாக இருந்த வைகோ. அன்றைக்கு புரட்சி புயல் பேச்சினால் பெரிதும் கட்சியினரால் ஈர்க்கப்பட்டு இருந்த வைகோவை நம்பி அவருடன் பல மூத்த திமுக நிர்வாகிகள் உடன் சென்றனர் .

இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்
வைகோ பேச்சு

திமுக அதிமுகவுக்கு அடுத்ததாக மதிமுக தான் தமிழகத்தில் பெருங்கட்சி என்ற நிலை அப்போது இருந்தது. ஆனால் வைகோ காலப்போக்கில் அந்த செல்வாக்கை இழந்தார். அவருக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து கட்சி தொடங்கியவர்களுக்கு கிடைக்கும் சீட் மட்டுமே மதிமுகவுக்கும் கூட்டணியில் கிடைத்தது. இது வைகோவின் தொண்டர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதனால் மதிமுகவிலிருந்து வெளியேறி பல நிர்வாகிகள் மீண்டும் திமுகவுக்கு சென்று விட்டனர்.

இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்
வைகோ ஸ்டாலின்

இப்படிப்பட்ட நிலையில் தன் மகன் துரை வையாபுரியை மதிமுகவில் முன்னிறுத்தினார் வைகோ. வாரிசு அரசியலை எதிர்த்து தானே திமுகவிலிருந்து வெளியேறினார் வைகோ. நாங்களும் அந்த காரணத்தை சொல்லித்தானே திமுகவிலிருந்து வெளியேறினோம். இப்போது வைகோவே வாரிசு அரசியலை முன்னிறுத்துகிறே என்று அதிருப்தி அடைந்த கட்சியின் சீனியர்கள் பலரும் மதிமுகவை விட்டு விலக ஆரம்பித்தனர். ஏற்கனவே வலுவிழந்திருந்த மதிமுக மீண்டும் பெரிதாக வலுவிழந்திருக்கும் நிலையில் , எந்த மு. க. ஸ்டாலினை காரணம் காட்டி கட்சியில் இருந்து வெளியேறினாரோ அதே மு. க. ஸ்டாலினுக்காக உயிர் உள்ளவரை பாடுபடுவேன். அவருக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று வைகோ சொல்ல, மிச்சம் இருந்த சீனியர்களும் கடும் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள் .

இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்
துரை வைகோ

இந்த நிலையில் தான் மதிமுகவின் சீனியர் திருப்பூர் துரைசாமி, ’’வாரிசு அரசியலை கொண்டு வருவதால் மதிமுகவில் எந்த பிரயோசனமும் இல்லை. அதே நேரம் திமுக தலைவர் ஆன மு. க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று சொல்லும் வைகோவுக்கு எதற்கு தனிக்கட்சி? என்ற கேள்வியை எழுப்பினார்.

வைகோவுக்கு திறமை ஆற்றல் இல்லை. இனியும் அவரால் கட்சியை நடத்த முடியாது. அதனால் தான் திமுகவுக்கு ஆதரவாக போய்விட்டார். மதிமுகவுக்கு இனி மேலும் எதிர்காலம் இல்லை என்பதால் மதிமுகவை தாய் கட்சி திமுகவுடன் இணைத்து விடுவது தான் சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது. அதை விட்டுவிட்டு மகனை ஆதரித்து அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்திருக்கிறது. இதனால் திமுகவுடன் அதிமுகவை இணைப்பதுதான் சாலச் சிறந்தது. 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை இனியும் ஏமாற்றாமல் திமுகவில் மதிமுகவை இணைத்து விட வேண்டும்’’ என்ற கோரிக்கையை அழுத்தமாக முன் வைத்தார்.

இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்
திருப்பூர் துரைசாமி

திருப்பூர் துரைசாமியின் கோரிக்கையை வைகோ ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் மதிமுகவின் மாநில அவைத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துவிட்டார் திருப்பூர் துரைசாமி. அவரை தொடர்ந்து மேலும் பலர் மதிமுகவிலிருந்து வெளியேறும்
நிலையில் இருக்க, திருப்பூர் துரைசாமியை மையப்படுத்தி தொடர்ந்து சலசலப்புகள் இருந்துகொண்டே இருக்கின்றன.

சட்டமன்றத் தொகுதியில் துரை வைகோ போட்டியிட விரும்பியதாகவும், இதற்காக அப்போது மதிமுகவின் அவை தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி இடம் மதிமுகவின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பேசியதாகவும், அதற்கு திருப்பூர் துரைசாமி மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மல்லை சத்யா இதை மறுத்து விளக்கம் அளித்திருக்கிறார்.

இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்
மல்லை சத்யா

2021 ஆம் ஆண்டு நடந்த 16 -வது சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக கூட்டணி அமைத்து களம் கண்டது. அந்தக் கூட்டணியில் அதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு தலைவர் வைகோ தனது தலைமையில் பேச்சு வார்த்தை குழுவை அமைத்து நான்கு கட்ட பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் மதிமுகவுக்கு மதுராந்தகம், மதுரை தெற்கு, அரியலூர், வாசுதேவநல்லூர், சாத்தூர் , பல்லடம் ஆகிய ஆறு தொகுதிகளை ஒதுக்கியது. திமுக இந்த ஆறு தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை தேர்வு செய்ய மதிமுகவின் ஆட்சி மன்ற குழு கூடி யார் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புகள் எளிதாக இருக்கும் என்பதை தீவிர ஆலோசனை நடத்தி ஆறு தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்
வைகோ

சாத்தூர் தொகுதியில் டாக்டர் ரகுராமனை ஆட்சிமன்ற குழு தேர்வு செய்தது. இதுதான் நடந்தது. ஆனால் சாத்தூர் தொகுதியில் வைகோவின் மகன் துரை போட்டியிட விரும்பியதாகவும் அதற்காக அப்போதைய மதிமுகவை அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி இடம் தான் பேசியதாகவும் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் செய்திகள் பரவுவது உண்மைக்கு புறம்பானது. துளி கூட இதில் உண்மை இல்லை என்று மறுத்திருக்கிறார் மல்லை சத்யா.

MUST READ