திமுக அமைச்சா் MRK பன்னீா் செல்வம், “முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பே விஜய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளாா்” என விமா்சித்துள்ளாா்.
தமிழக வெற்றிக் கழகத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியபோது, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தையும், பிளவுவாத அரசியலையும் எதிர்த்து ஒரு புதிய பாதையை உருவாக்குவதே எனது நோக்கம் என்று விஜய் கூறினார். ஊழலை ஒழிப்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளதாகவும் கூறினாா். பணம், சாதி, மதம், இனம் போன்றவற்றால் பிரிக்கும் அரசியலை வெறுப்பதாகவும், லஞ்ச ஊழல் இல்லாத திறமையான நிர்வாகத்தை உருவாக்குவதாகவும் அறிவித்திருந்தாா்.
விக்ரவாண்டி மாநாட்டில் பேசும்போது தமிழகத்தில் தற்போது ஆளும் சக்திகளை ஊழல் சக்தி என்று குறிப்பிட்டு, அத்தகைய ஆட்சி தொடரக் கூடாது என்று வலியுறுத்தினார். ஊழலை ஒழிப்பது தனது கட்சியின் அடிப்படை இலட்சியம் என்றும் அதற்காகவே தான் அரசியலில் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தாா். கட்சியின் சின்னமாக விசில் ஒதுக்கப்பட்டபோது, அதை ஊழலை ஒழிக்கும் சின்னம் என்று அவர் விளக்கினார். தமிழக மக்களின் ஒரே சின்னமாக விசிலை முன்வைத்து, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை குறியீடாக்கினார்.

இந்நிலையில், திமுக அமைச்சா் MRK பன்னீா் செல்வம், “முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பே விஜய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளாா்” என விமா்சித்துள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவா், திமுகவை தீய சக்தி என்று குற்றம்சாட்டும் விஜய், வரி ஏய்ப்பு செய்து ஊழல் செய்துள்ளதை கோா்ட்டே உறுதிப்படுத்திவிட்டது என்றாா். மேலும் விஜய் ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என டிக்ளோ் செய்ய தயாரா எனவும் சவால் விடுத்துள்ளாா்.
வருமானத்தை மறைத்ததால் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….


