தவெக தலைவர் விஜயின் அரசியல் நிலைப்பாடு, அதிமுகவை அவர் விமர்சிக்காதது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மழுப்பாலான பதிலளித்துள்ளார்.

ஆண்டிப்பட்டியில், இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள், ”திமுக, பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் நடிகர் விஜய், அதிமுக குறித்து விமர்சிக்காத நிலையில், அதிமுகவினரும் விஜய் குறித்து விமர்சிப்பதில்லை. இதனை 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அச்சாரமாக எடுத்து கொள்ளலாமா ? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ”ஆளுகிற கட்சியைத்ன் விமர்சனம் செய்கிறார்கள். இன்று நிறைய பேர் எதிர்க்கட்சிகள் என்று சொல்லி கொண்டாலும் , சட்டமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி அதிமுக மட்டுமே. நான்கு ஆண்டுகளாக ஆளும் திமுக அரசு செய்யும் தவறுகளை எடுத்துக்காட்டி வருவது எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான்.
நிறைய பேர் எதிர்க்கட்சிகள் என்று சொல்லிக் கொண்டாலும் , சட்டமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி அதிமுக மட்டுமே. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே. நான்கு ஆண்டுகளாக ஆளும் திமுக அரசு செய்யும் தவறுகளை நேர்மையாக சுட்டிக்காட்டி வரும் அவருக்கு செல்லும் இடம் எங்கும் வரவேற்பு அதிகரித்திருத்து வருகிறது.
அதே போல தேனியிலும் அதிகரித்திருத்து இருக்கிறது. அனைவரும் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வகையில் நாளை தேனியில் எடப்பாடி பழனிசாமி பேசும் உரை இருக்கும்” என்று கூறி அங்கிருந்து நழுவி சென்றார்.