spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

-

- Advertisement -

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி மதிப்புள்ள 142 அசையா சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மசூலிப்பட்டிணம் நகர மேம்பாட்டு ஆணையம் வழக்கு தொடர்பாக சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் சித்தராமையாவின் சொத்துக்களை முடக்கி பெங்களூரு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சித்தராமையாவின் சொத்துக்கள் ரியல் எஸ்டேட் வணிகர்கள் மற்றும் ஏஜென்ட்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தன. மைசூரில் உள்ள ஊழல்வழக்குகளை விசாரிக்கும் லோக்ஆயுக்தா போலீஸ் அதிகாரிகள் சித்தராமையா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததையடுத்து,அமலாக்கப்பிரிவு சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை எடுத்தது.

we-r-hiring

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவி பி.எம். பார்வதி பெயரில் மசூலிப்பட்டிணம் நகர மேம்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான நிலத்தில் 3 ஏக்கரை 14 இடங்களில் வாங்கியுள்ளார். இந்த 14 இடங்களில் தள்ளுபடியாக ரூ.56 கோடி கிடைத்துள்ளது.

மசூலிப்பட்டிணம் நகர மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டி.பி.நடேஷ், பிஎம் பார்வதிக்கு இந்த சட்டவிரோத நிலத்தை ஒதுக்கியதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்த 14 இடங்களை பிஎம் பார்வதிக்கு சட்டவிரோதமாக கைமாற்றி, அந்த நிலத்தை ரியல்எஸ்டேட் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்து, அதிகஅளவில் லாபத்தையும், கணக்கில் வராத பணத்தையும் பெற்றுள்ளனர். இந்த நிலங்களை போலியாக ஒருவர் பெயரில் பதிவு செய்து கொண்டு, அதை விற்பனை செய்ய வைத்துள்ளனர் ” என அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

MUST READ