கொடநாடு கொலை- முதல்வர் எங்களை மிரட்டப்பார்க்கிறார்: கே.பி.முனுசாமி ஆவேசம்
கோடநாடு வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த கே.பி.முனுசாமி, “கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜரானது திமுக வழக்கறிஞர்தான். கோடநாடு வழக்கை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியை மிரட்ட நினைப்பதால் அதிமுக சிபிஐ விசாரணை கோருகிறது. அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் அதிக குற்றச்சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. ஐஜி விசாரித்த வழக்கை, ஐஜி அந்தஸ்திற்கு குறைவானவரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன?
இரண்டு ஆண்டுகளை கடந்தும் கோடநாடு வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக முதலமைச்சர் முயற்சி செய்கிறார். கோடநாடு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் உண்மைக்கு புறம்பான செய்திகளை சட்டப்பேரவையில் கூறிவருகிறார். அதற்கெல்லாம் ஆதாரப்பூர்வமோடு எதிர்க்கட்சித் தலைவர் பேரவையில் தெரிவித்தார். ஆனால் அவையெல்லாம் ஊடகங்கள் வரவில்லை” எனக் கூறினார்.