Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று ஆலோசனை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று ஆலோசனை

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை!

தமிழ்நாட்டில் பிப்ரவரி 27 ஆம்  தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து  ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக அதன்  தலைவர் கமல்ஹாசன் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

we-r-hiring

இந்நிலையில் இது பற்றி ஆலோசித்து முடிவெடுக்க சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை 11 மணியளவில்  ஆலோசனை கூட்டமானது நடைபெற உள்ளது.

காங்கிரசுடன், கமல்ஹாசன்  இணக்கமாக உள்ள நிலையில்  ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு அளிப்பாரா? அல்லது தனித்து போட்டியிடுவரா? எனபது குறித்த அறிவிப்பை இன்று  நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசத்து  முடிவை அறிவிப்பார் என தெரிகிறது!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் வாக்குகளை  பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ