Homeசெய்திகள்அரசியல்உலக கோப்பை ஹாக்கி போட்டிகளை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உலக கோப்பை ஹாக்கி போட்டிகளை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

ஒடிசா மாநிலத்திற்கு சென்று உள்ள தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.

உலகின் 16 நாடுகள் பங்கேற்கும் பதினைந்தாவது உலக கோப்பை ஹாக்கி போட்டிகள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேளா பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

we-r-hiring

இந்த போட்டிகளை காணவும், ஒடிஸா மாநில விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிடவும் சிறப்பு விருந்தினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றுள்ளார்.

அப்போது அங்கு நடைபெறும் ஹாக்கி போட்டிகளை காணும் உதயநிதி, அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து, நினைவு பரிசை வழங்கி பேசினார்.

தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தில் துப்பாக்கி சூடு மையத்தையும் அவர் பார்வையிட்டு, துப்பாக்கி சுடுதலையும் மேற்கொண்டார்.

MUST READ