ஆதவ் அர்ஜுன் , எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் ஆகிய இன்னும் சில பெரும் பணக்காரர்களின் திரை மறைவில் கூட்டணி பேரம் நடந்ததாக நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து நக்கீரன் பிரகாஷ் தனியாா் யுடியப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், மேற்கு வங்காள சட்ட மன்றத் தேர்தலில் மம்தா பேனர்ஜியின்“ வெற்றிக்காக பிரசாந்த் கிஷோர் மற்றும் ஆதவ் அர்ஜுன் இணைந்து வேலை செய்து வெற்றி பெற செய்தாா்கள். அதன் பின்னா் பிராசாந்த் கிஷோரால் ஆதவ் அர்ஜுனுக்கு திமுக தலைமையின் அறிமுகம் கிடைத்து. 2021 தேர்தலில் பிரசாந்த் கிஷோருடன் ஆதவ் அர்ஜுன் இணைந்து தேர்தல் வியூகம் அமைத்து திமுகவை வெற்றி பெற செய்தாா்கள். அப்போது திமுகவில் ஆதவ் அர்ஜுன் M.P சீட் கேட்டாா். அதற்கு திமுக ஒப்புக்கொள்ளததால் அவர் திமுக வில் இருந்து விலகி விசிகவில் இணைந்தாா். அதன்பின்னா் விசிக திமுக உடன் தொகுதி பங்கீட்டிலும் ஆதவ் அர்ஜுன் எதிர் பார்த்த தொகுதியும் கிடைக்க வில்லை.

திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுன் செயல்பாடுகள் மீது தனிப்பட்ட பிடிப்பு ஏற்பட்டு கட்சியில் விசிக வின் துணை பொது செயலாளர் என்ற பதவி கொடுத்தாா். ஆனால் கட்சியின் கொள்கையையும், கோட்பாடுகளையும் ஆதவ் அர்ஜுன் தொடா்ந்து மீறுவதாக பல குற்றசாட்டுகள் ஏழுந்தது. திருமாவும் ஆதவ் அர்ஜீனிடம் பொது நிகழ்ச்சிகளில் திமுக விற்கு எதிராக அரசியல் பேச வேண்டாம் என்று பல முறை அறிவுறித்தியுள்ளாா்.
இந்த நிலையில் கடந்த டிசம்பா் 6 ம் தேதி நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்காா் என்ற நூல் வெளியிட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக திரைமறைவில் ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் திருமாவளவன் அதை உணர்ந்து, சில காரணங்களை சொல்லி தவிர்த்து விட்டாா். பிறகு அந்த நிகழ்ச்சியில் தவெக தலைவா் விஜய் கலந்து கொண்டாா்.
ஆதவ் அர்ஜுன் ,எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் ஆகிய இன்னும் சில பணக்காரர்கள் திரை மறைவில் கூட்டணி பேரத்தில் ஈடுபட்டனா். அதில் முதல் கட்டமாக திமுக கூட்டணியில் இருந்து விசிகவை பிரித்து தவெக கூட்டணியில் சேர்க்கவேண்டும். அதன் பின்னா் தவெக – விசிக இணைந்து அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும். இதுதான் திமுக விற்கு எதிராக அவா்களின் நோக்கம். ஆதவ் அர்ஜுனின் கூட்டணி பேரத்தை விசிக தலைவர் திருமாவளவன் புரிந்து கொண்டாா். அதனால் பல முறை பொது நிகழ்ச்சிகளில் திமுக விற்கு எதிராக அரசியல் பேச வேண்டாம் என அறிவுறித்தியும் ஆதவ் அர்ஜுன் கேட்கவில்லை. தொடர்ந்து திமுக வை விமர்சனம் செய்து வந்தாா்.
திமுகாவை பற்றி ,வாரிசு அரசியல் என்றும், மன்னர் ஆட்சி என்றும் விமர்சனங்கள் செய்தாா். இவை எல்லாம் விசிக, திமுக கூட்டணி பிளவிற்கு வழிவகுக்கும். ஆதவ் அர்ஜுனின் சூழ்ச்சியை திருமா புரிந்துகொண்டாா், அதனால் கட்சியின் கொள்கையை மீறியதாக ஆதவ் அர்ஜுனை இடைநீக்கம் செய்தாா் . இவ்வாறு நக்கீரன் பிரகாஷ் கூறியுள்ளாா்.
அரசியல் பேசவேண்டாம் என்று சொன்னேன் – மீறி பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது