spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் எங்கள் ஆட்சி தான்-சேகர்பாபு

எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் எங்கள் ஆட்சி தான்-சேகர்பாபு

-

- Advertisement -

2026 தேர்தல் வர இருப்பதால் அவர்களுக்கு விஷக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற எடப்பாடி கேள்விக்கு, எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும்  அடுத்தது எங்கள் ஆட்சி தான் நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளாா்.எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் எங்கள் ஆட்சி தான்- சேகர்பாபு மேலும், நெல்லையப்பர் கோவில் 519 ஆவது திருத்தேரோட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”ஆசியாவிலேயே மிக உயரமான தேராக இந்த திருத்தேர் 519 ஆவது தேரோட்டமாக இன்றைக்கு வெகு விமர்சையாக சிவ சிவா என்ற கோஷத்தோடு தொடங்கியுள்ளது.தேரோட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி. கடந்த ஆண்டில் ஏற்பட்ட சிறுசிறு பிரச்சனைகளை இந்த ஆண்டு தீர்த்துள்ளோம். புதிதாக ரூ.59 லட்ச ரூபாய் செலவில் சண்டிகேஸ்வரர் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிற்பங்களும்  புனரமைக்கப்பட்டு புதிய தேர் வடமும் வாங்கப்பட்டுள்ளது. தேரோட்டத்திற்காக அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட்டுள்ளது.

134 திருக்கோவில்களுக்கு மர தேர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 19 கோடி செலவில் 72 திருக்கோவில்களுக்கு தேரில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்கள் மழையில் வெயிலிலும் நனையக்கூடாது என்பதற்காக 30 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கு பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 9 புதிய வெள்ளித் தேர்கள் பணி நடைபெற்று வருகிறது. ஓடாத தேர்களையும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் எங்கள் ஆட்சி தான்- சேகர்பாபு எடப்பாடி பழனிச்சாமி கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் இந்த கூட்டத்தை பார்த்து தமிழக  முதல்வருக்கு ஜுரம் வந்துவிடும் என்று கூறியுள்ளார் என்ற கேள்விக்கு,

we-r-hiring

2026 தேர்தல் வர இருப்பதால் அவர்களுக்கு விஷக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் திருச்செந்தூரில் குடமுழுக்கு நடைபெற்றதை பார்த்ததும் இனிமேல் எப்பொழுதும் திமுக ஆட்சி தான் என்பது தெரிய வந்துள்ளது. எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் எங்கள் ஆட்சிதான். எல்லோருக்கும் எல்லாமுமான அரசு இது. நான் இந்த தேரோட்டத்தில் வடம் பிடித்தேன். கிறிஸ்தவர் என்ற முறையில் அப்பாவு வடம் பிடித்திருக்கிறார். இஸ்லாமியர் என்ற முறையில் எம்எல்ஏ அப்துல் வகாப் வடம் பிடித்து இழுக்குறார். இதே சமூக நீதி  தொடர வேண்டுமென்றால் திமுக ஆட்சி வர வேண்டும்” என்று கூறினார்.

பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்தாலும் விபத்துகள் நடந்து நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன-ஆளூர் ஷா நவாஸ்

MUST READ