spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பெரியார் விமர்சனம்... திமுகவுக்கு 2 வகையில் உதவிய சீமான்..!

பெரியார் விமர்சனம்… திமுகவுக்கு 2 வகையில் உதவிய சீமான்..!

-

- Advertisement -

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என பேசி, அவர் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.சீமான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் - புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

‘‘ஆதாரங்களை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தி நீதிமன்றம் வாயிலாகவே ஈ.வெ.ராமசாமி குறித்து அண்ணன் சீமான் பேசிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை என்பதை தமிழ்நாட்டிற்கே தெரியப்படுத்துவோம். ஈ.வெ.ராமசாமியின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க நீதிமன்றத்தை உத்தரவிட வைப்போம். சரியானது வென்றே தீரும்’’ என்கிறார்கள் நாம் தமிழர் கட்சி தம்பிமார்கள்.

we-r-hiring

 

ஆனால், பெரியார் பற்றி பேசி திமுகவுக்கு சீமான் உதவியுள்ளதாக அரசியல் பிரமுகரும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான மருது அழகுராஜ் அவர் தனது பதிவில், ‘பெரியார் மீதான விமர்சனத் தாக்குதலால் பொங்கல் பை ஏமாற்றத்தில் கொதித்திட்ட தமிழக மக்களை மடைமாற்றம் செய்தும் கூடவே இடைத்தேர்தல் நடக்கும் பெரியார் பிறந்த மண்ணில் வாழும்
மக்களிடம் கோபத்தை கிளறிவிட்டும் ஆளும் திமுக-வுக்கு ஒருவகையில் அல்ல… இருவகையில் உதவியிருக்கிறார் சீமான்’’ எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ