spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாமக தலைமையில் 2026 ல் ஆட்சி - டாக்டர் அன்புமணி PMK will form government...

பாமக தலைமையில் 2026 ல் ஆட்சி – டாக்டர் அன்புமணி PMK will form government in 2026 – Dr. Anbumani

-

- Advertisement -

தமிழகத்தில் பாமக தலைமையில் 2026ல் கூட்டணி ஆட்சியை அமைக்கும். அதற்கான வியூகங்களை 2024ல் பாமக தொடங்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் அன்புமணி, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தான் திட்டமிடுகிறார்கள். அடுத்த 30, 40 ஆண்டுகளுக்கு திட்டமிடுவதில்லை.

we-r-hiring

சென்னைக்கு இரண்டாம் விமான நிலையம் அவசியம் இது தொடர்பாக பாமக ஆறு முறை அறிக்கை அனுப்பி உள்ளது. திருப்போரூர் அருகே ஐயாயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளது. ஆனால் அதற்கு அருகில் கல்பாக்கம் உள்ளது என்று காரணத்தை சொல்கிறார்கள்.

தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை மறுபடியும் பலர் ஆட ஆரம்பித்துள்ளனர். ஆளுநர் கையெழுத்து போட்டு லட்சக்கணக்கான குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என பாமக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

எந்த ஈகோ இருந்தாலும் முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து பேச வேண்டும். இருவருக்கும் ஈகோ இருந்தால் அதனால் தமிழகம் தான் பாதிக்கப்படும். முதல்வர் மற்றும் ஆளுநர் அரசியலமைப்புக்கு உட்பட்டவர்கள். தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் மக்கள் நலன் சார்ந்து ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும் என்று அன்புமணி கேட்டுக்கொண்டார்.

மேலும் ஆளுநர் அவசர சட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டு, சட்டமன்றம் அனுப்பிய மசோதாவை கிடப்பில் போட்டு இருக்கிறார். இது குறித்து அவர் விளக்க வேண்டும். முதலமைச்சரும், ஆளுநரும் ஈகோ இல்லாமல், மக்களுக்காக பணிபுரிய வேண்டும்.

ஆளுநர், ஜனாதிபதி அவர்கள் இருவரும் நடுநிலையில் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை என்பதைப் போல கேள்வி எழுந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டை 81 சதவீதம் விழுக்காடாக உயர்த்த அந்த மாநில முதல்வர் திட்டமிட்டுள்ளார். அதில் குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு 32 விழுக்காடு தர முடிவு செய்துள்ளதை பாமக வரவேற்கிறது.

பிராமணர், ரெட்டியார், நாடார், முதலியார், வெள்ளாளக், கவுண்டர், தேவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன சமுதாயத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கொடுங்கள் இதைத்தான் தந்தை பெரியார் கூறினார்..

தனியார் பால் விலையை குறைக்க வேண்டும். தனியார் பால் நிறுவனம் மாபியா போன்று செயல்படுகிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

MUST READ