ஓபிஎஸ்-க்கு டெல்லி காத்திருக்கிறது, சண்டிகர் மற்று மமேகாலயாவில் கவர்னர் பதவி காத்திருக்கிறது என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில், அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு குறித்து திருப்பரங்குன்றம் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, ஓபிஎஸ் டெல்லிக்கு செல்வது ஒன்றும் பெரிதல்ல , டெல்லி அவருக்கு காத்திருக்கிறது, சண்டிகர் மற்றும் மேகாலயாவில் கவர்னர் பதவி காத்திருக்கிறது , அதை பெற்றுக்கொண்டு போகட்டும்.

ஜானகி போன்று அதிமுகவில் இருந்து அமைதியாக ஓபிஎஸ் ஒதுங்கி இருப்பது நல்லது. அதிமுகவை அழிப்பதற்கும், கெடுப்பதற்கும் டெல்லியை நோக்கி செல்ல வேண்டாம். பாஜகவிடம் தொடர்ந்து கூட்டணியில் தான் உள்ளோம், இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறோம் , ஆதலால் ஓபிஎஸ் அதிமுகவை கெடுக்க நினைக்க வேண்டாம்” எனக் கூறினார்.