கடந்த 9 ம் தேதி ஆளுநர் உரையுடன் 2023 ம் ஆண்டிற்கான சட்டமன்றம் கூடியது.
அப்போது ஆளுநர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஆளுநருடன் வந்த முக்கிய விருந்தினர் ஒருவர் மாடத்தில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தார்.


அந்த செயல் அவை உரிமை மீறலுக்குறியது. அதனை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கடந்த பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, இந்த பிரச்சனையில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் இதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை குழுவிற்கு உத்தரவிடப்படுகிறது என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் அவை உரிமை குழு அதன் தலைவர் துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அவை உரிமை குழு கூடி ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது ஆளுநர் விருந்தினர் மாடத்தில் இருந்து சட்டமன்ற நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தது தொடர்பாக அவை உரிமைக்குழு இன்று விவாதிக்க உள்ளது.
